தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை..: இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.28,968க்கு விற்பனை

சென்னை: தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.28,968க்கு விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. முன்னதாகக் கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25,000 ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. ஜூன் மாதம் 26,000 ரூபாயையும் தாண்டியது. ஆகஸ்ட் மாதம் 27,000, 28,000, 29,000 என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டிவிட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைவதும், பின்னர் மீண்டும் உயர்வதுமாக இருந்து வந்தது.

Advertising
Advertising

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.104 அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன், ரூ.28,968க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.13 உயர்ந்து ரூ.3,621க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி வர்த்தகமாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் ரூ.48.30 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.48,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலகளவில் தங்கத்தின் விலை நிலையாக இருந்து வரும் நிலையில், நியூயார்க் மற்றும் அமெரிக்கா நகர தங்கச்சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 1,413 டாலர்கள் என்ற அளவில் உள்ளது.

Related Stories: