கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டது கோவை போலீஸ்

கோவை : கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள்  என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை கோவை போலீஸ் வெளியிட்டது. முன்னதாக இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த 6 தீவிரவாதிகளும் இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாகவும் உளவுத்துறை போலீசாருக்கு அலர்ட் கொடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரித்த நிலையில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர். புகைப்படத்தில் உள்ள நபர்கள் குறித்த தகவல் தெரிந்தால் போலீசாரை பொது மக்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் பயங்கரவாதிகள் லஷ்கர் இ-தொய்பா அமைப்பை

சேர்ந்தவர்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: