போரூர் அருகே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது

சென்னை: சென்னை போரூர் அருகே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பெரிய குலத்துவான் சேரியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகில் உள்ள சுடுகாட்டில் அழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாங்காடு தடிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் வசந்தகுமாரை அழைத்து சென்ற அஜித்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தியதில் காட்டுப்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த், கார்த்திக், மணிமாறன், ராமாபுரத்தை சேர்ந்த சக்திவேல் மற்றும் பரத்குமார் ஆகியோருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தங்களது நண்பரை வசந்தகுமார் கொலை செய்ததால் பழிக்கு பழி வாங்க அவரை தீர்த்து கட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய சக்திவேல், பரத்குமார் ஆகியோர் பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதை அடுத்து அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க மேஜிஸ்ரேட் உத்தரவிட்டதை தொடர்ந்து அனைவரையும் புழல் சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.


Tags : Porur, celebrity rowdy, murder, affair, 4 arrested
× RELATED வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது