நாகை எம்.பி மீது கத்தியை வீசிய 3 பேர் கைது

வேதாரண்யம்: நாகை மக்களவை தொகுதியில் தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த செல்வராசு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் எம்பி செல்வராஜ் வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டிருந்தபோது, அகஸ்தியன்பள்ளி, காளியம்மன்கோயில் அருகே  லெட்சுமணன், வேதமூர்த்தி, லோகு ஆகிய மூவரும் எம்.பியை திட்டிக் கொண்டு, கையிலிருந்த கத்தியை அவரை நோக்கி வீசினார். அந்த கத்தி வாகனத்தில் பட்டு கீழே விழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிந்து லோகு (24), அப்பு (எ) வேதமூர்த்தி (35), லெட்சுமணன் (48) ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: