×

மீனவர்களின் வாழ்வுரிமையை அழிக்கும் மத்திய அரசின் புதிய மசோதாவை கிழித்து கடலில் வீசும் போராட்டம்: ராமேஸ்வரத்தில் பரபரப்பு

ராமேஸ்வரம்: மீனவர்களின் வாழ்வுரிமையை அழிக்கும் மத்திய அரசின் மசோதாவை கிழித்து கடலில் வீசும் போராட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைக்கு, நேற்று ஏஐடியூசி மீனவர் தொழிலாளர் சங்கத்தினர் மாநிலச் செயலாளர் செந்தில்வேல் தலைமையில் வந்தனர். இவர்கள் கடலில் இறங்கி மத்திய அரசின் புதிய மீன்பிடி மசோதா, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக கூறி, மசோதா நகலை கிழித்து எறிந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில், மத்திய அரசின் கடலோர மண்டல மேலாண்மை அறிக்கை 2019ஐ ரத்து செய்தும், கடலோர மீனவ கிராம பிரதிநிதிகள் உள்ளடக்கிய கமிட்டி அமைக்க வலியுறுத்தியும், கடல் மீன் வளர்ப்பு என்ற பெயரில் கடலை தனியாருக்கு வழங்கும் திட்ட மசோதாவை ரத்து செய்யவும், கடலோர இறால் பண்ணையை தடை செய்யவும், மீன், கருவாடுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவும், உப்பூர் அனல்மின் நிலையத்திற்காக கடலுக்குள் பாலம் கட்டுவதை தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Fishermen, Life, Federal Government, New Bill, Sea, Struggle, Rameswaram
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...