நண்பனை கொன்றதற்கு பழிக்குப்பழி மதுரை பைனான்சியர் ஓட ஓட வெட்டி கொலை: வாட்ஸ்அப்பில் வீடியோ வைரல்

மதுரை: மதுரை, புதூர் ராம்வர்மா நகரை சேர்ந்தவர் ராஜா(35). பைனான்சியர். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் புதூரில் உள்ள கடை பகுதியில் ராஜா டூவீலரில் சென்ற போது டூவீலர்களில் ஆயுதங்களுடன் வந்த கும்பல், அவரை வழி மறித்து வெட்டியது.  தப்ப முயன்றவரை கும்பல் ஓட ஓட விரட்டி விரட்டி சரமாரியாக வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டு தப்பியது. இதுகுறித்து புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி யது.  இதற்கிடையே இக்கொலை தொடர்பாக மதுரை, புதூர் ராம்வர்மா நகரைச் சேர்ந்த நிஜாம்முகைதீன், கார்த்திக் (எ) குட்டை கார்த்திக், தவ்பீக், ஹரிகிருஷ்ணன் மற்றும் சிலர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களில் 4 பேரை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

 போலீசார் கூறும்போது, ‘‘கொலையான ராஜா, சேவல்களை வளர்த்து சண்டைக்கு விட்டு வந்தார். கடந்த 2016ம் ஆண்டு வாடிப்பட்டியில் நடந்த சேவல் சண்டையில் ராஜா தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார். அப்போது ராஜா தரப்பினருக்கும், ராம்வர்மா நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ராஜா உள்ளிட்ட நபர்கள் சேர்ந்து ஸ்ரீதரை கொலை செய்துள்ளனர். இதற்கு பழிக்குப்பழியாக தரின் நண்பர் கார்த்திக் (எ) குட்டை கார்த்திக் உள்ளிட்ட சிலர் சேர்ந்து ராஜாவை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது’’ என்றனர்.

Related Stories: