அரசு டாக்டர் வீட்டில் புகுந்து 197 பவுன் நகை கொள்ளை

ஊத்தங்கரை:  கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருபவர் மாரிமுத்து. இவரது வீடு, ஊத்தங்கரை-சேலம் மெயின்ரோட்டில் உள்ளது. இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லை. சென்னை சென்றிருந்த தேவேந்திராவும் மகனும் இரவில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 197 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது தெரிந்தது. இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். பட்டப்பகலில், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வீட்டில் புகுந்து 50 லட்சம் மதிப்பிலான 197 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
Advertising

Related Stories: