தயாரிப்பாளர் தர்மராஜன் மரணம்

சென்னை: சினிமா தயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜன் நேற்று காலமானார். அவருக்கு வயது 77.  சிவாஜி நடித்த இளைய தலைமுறை, அக்கரை பச்சை, வடைமாலை உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் தர்மராஜன். நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் வசித்து வந்த அவர். கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் குன்றி இருந்தார். நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு சாவித்ரி என்ற மனைவி உள்ளார். இறுதி சடங்கு இன்று நடக்கிறது.

Related Stories: