முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி 3 விக்கெட் இழந்து இந்திய திணறல் : மேற்கிந்திய தீவு அபார பந்து வீச்சு

நார்த் சவுண்ட்: முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்யின் ஷிப் போட்டியில் மேற்கிந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கேப்டன் கோஹ்லி உள்பட 3 பேர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இதனால் ரன் சேர்க்க முடியாமல் திணறி வருகிறது. கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிகள் தற்போது தொடங்கி உள்ளது. இந்தியா-மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையான முதல் டெஸ்ட் போட்டி நேற்று நார்த் சவுண்ட் பகுதியில் துவங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் துவக்க வீரர்களாக கே.எல்.ராகுல். மயாங் அகர்வால் இறங்கினர். ஆனால் ரோச் பந்து வீச்சை சமாளிக் முடியாமல் அகல்வால் 5 ரன்னிலும் புஜாரா 2 ரன்னிலும் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்கள்.

Advertising
Advertising

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோஹ்லி கேப்ரியேல் பந்தில் 9 ரன்னில் அவுட் ஆனார். இதனால் இந்தியா 20 ரன் எடுப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது. இதையடுத்து ஓபனர் கே.எல்.ராகுலுடன் இணைந்த ரகானே ஜோடி பொறுமையாக விளையாடி மேற்கிந்திய தீவு வீரர்களை சோதித்தனர். உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 68 ரன் எடுத்திருந்தது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 60 புள்ளிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: