அடுக்குமாடி குடியிருப்பில் ஆழ்துளை கிணறு அமைத்தபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி: வீட்டின் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் போர் போடும்போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து குடியிருப்பு செயலாளரும், வீட்டின் உரிமையாளருமான பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆயிரம்விளக்கு உட்ஸ் சாலையில் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் செயலாளராக உஷா மீரா (63) உள்ளார். குடியிருப்பில் சரியாக தண்ணீர் இல்லாததால் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு ெசய்துள்ளார். நேற்று காலை மணிகண்டன் (27) என்பவரின் போர் இயந்திரத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பில் போர் போடும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில், செஞ்சி அருகே உள்ள கம்மாகரம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (20), விஜயகுமார் (22) ஆகியோர் ஈடுபட்டனர்.

அடுக்குமாடி குடியிருப்புக்கான மின்சார வயர் பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்தது. இதை சரியாக கணக்கிடாமல் இயந்திரம் மூலம் போர் போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போர் மூன்று அடி ஆழத்திற்கு சென்றதும் குடியிப்புக்கான மின்சார வயரை இரும்பு ராடு துண்டித்துள்ளது. அப்போது போர் இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்த சக்திவேல் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி விசப்பட்டு அவர் உயிருக்கு போராடினார். உடனே சக ஊழியர்கள் சக்திவேலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சக்திவேலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆயிரம் விளக்கு இன்ஸ்ெபக்டர் ராஜசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது, மின்சார வயர் கீழே செல்வதை முறையாக கணக்கிடாமல், அஜாக்கிரதையாக  செயல்பட்டதாக ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு செய்த குடியிருப்பின் செயலாளர் உஷா மீரா மற்றும் போர் இயந்திரத்தின் உரிமையாளர் மணிகண்டன் ஆகியோரை கைது செய்தார். உயிரிழந்த சக்திவேல் ஐடிஐ முடித்துவிட்டு வேலை தேடி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ஆயிரம் விளக்கு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: