யோகா மற்றும் இயற்கை மருத்துவ டாக்டர் படிப்புக்கு ஆக.28ல் கவுன்சலிங்

சென்னை: இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி இயக்ககத்தின் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ டாக்டர் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 28, 29ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்து கல்லூரிகளில் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் வரும் 28, 29ம் தேதிகளில் நடைபெறும். 28ம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரையில் அனைத்து சிறப்பு பிரிவுகளில் தரவரிசை எண் 1 முதல் 398 வரையிலும், பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரையில் தரவரிசை எண்கள் 399 முதல் 797 வரையிலும் நடைபெறும். 29ம் தேதி முற்பகல் 798 முதல் 1,214 வரையிலும், பிற்பகல் 1,215 முதல் 1,631 வரையிலும் நடைபெறும்.

தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு கால அட்டவணை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் பெறதவர்கள் www.tnhealth.org என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் தங்களின் விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதியை அளித்து கலந்தாய்வு அழைப்புகடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அனைத்து அசல் சான்றிதழ்களுடன் அல்லது தற்சமயம் படித்து வரும் கல்லூரியிலிருந்து பெற்ற போனபைட் சர்டிபிகேட்டுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து 27ம் தேதி அன்றோ அல்லது அதற்கு பின்னரோ சென்னையில் பணமாக்கதக்க வகையில் ‘Director of Indian Medicine and Homoeopathy, chennai-106’ என்ற பெயரில் கல்விக்கட்டணத்தின் ஒரு பகுதி 5 ஆயிரம், கலந்தாய்வு கட்டணம் 500ல் எடுக்கப்பட்ட இரண்டு வரைவோலைகளுடன் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: