திமுக எம்பிக்கள் கூட்டம் ஒத்திவைப்பு வரும் 29ம்தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்: க.அன்பழகன் அறிவிப்பு

சென்னை: சென்னையில் நாளை நடைபெற இருந்த திமுக எம்பிக்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் வரும் 29ம்தேதி நடைபெறும் என்று பேராசிரியர் அன்பழகன் அறிவித்துள்ளார்.  திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 24ம்தேதி அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், தேதி மாற்றப்பட்டு வரும் 29ம்தேதி காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம் ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது, திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: