ராணுவம் இஷ்டம் போல் செயல்படுகிறது காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பது உண்மை : ஷீலா ரசீத் மீண்டும் திட்டவட்டம்

புதுடெல்லி: ‘‘ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை சம்பவங்கள் நடப்பதாக நான் கூறிய கருத்தில் மாற்றம் இல்லை’’ என அரசியல் விமர்சகர் ஷீலா ரசீத் கூறியுள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரும், அரசியல் விமர்சகருமான ஷீலா ரசீத், டிவிட்டரில் கடந்த 18ம் தேதி வெளியிட்ட தகவலில், ‘ஜம்மு காஷ்மீரில் ராணுவம் இஷ்டத்துக்கு ஆண்களை கைது செய்தும், வீட்டில் சோதனை நடத்தியும், மக்களை துன்புறுத்துகிறது,’ என கூறியிருந்தார். இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஆதாரங்கள் எங்கே? என நிருபர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஷீலா ரசீத் ஆவேசமாக பதில் அளித்தார்.

அவர் கூறுகையில், ‘‘காஷ்மீரில் இருந்து வந்த மக்களுடன் அதிகாரப்பூர்வமாக நான் உரையாடி இந்த கருத்தை தெரிவித்தேன். பல கருத்துக்களை நான் கூறினேன். காஷ்மீர் மக்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை. நான் கூறிய கருத்து தொடர்பாக ராணுவம் விசாரணை நடத்தட்டும். அங்கு நான் கூறியதை உண்மை என நிருபிக்கிறேன். ஆனால், தவறு செய்த ராணுவத்தினருக்கு தண்டனை வழங்கப்படும் என்ற உறுதியை ராணுவம் அளிக்க வேண்டும். நான் டிவிட்டரில் கருத்து வெளியிடக் கூடாதா? மோடி அரசில் இதற்கும் தடையா? நான் நிருபர்களிடம் ஏன் ஆதாரம் தர வேண்டும். நீங்கள் காஷ்மீர் சென்று, அங்கு என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். நான் வதந்தியை பரப்பவில்ைல. நான் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.

Related Stories: