×

பொருளாதார நிலை தேக்கம் முதலீட்டாளர் கலக்கத்தால் சென்செக்ஸ், நிப்டி சரிவு

மும்பை: உலக அளவில் பொருளாதார நிலை தேக்கம், ஆசிய பங்குச்சந்தைகளில் பலவீனமான வர்த்தகம் போன்றவையால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்தனர். இதனால், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்), தேசிய பங்குச்சந்தை (நிப்டி) ஆகியவற்றில் நேற்று விறுவிறுப்பு காரணப்படவில்லை. வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 587  புள்ளிகள் குறைந்து மொத்தம் 36,472.93 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோல், நிப்டி 177.35 புள்ளிகள் சரிந்து மொத்தம் 10,741.35 புள்ளிகளில் நிலை பெற்றது. கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு நேற்று சரிவை சந்தித்தது. தேசிய பங்குச்சந்தையில் நேற்று 1,433 பங்குகள் விலை குறைந்தன. ஆட்டோமொபைல் தொழிலில் வாகனங்கள் விற்பனை குறைவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு மற்றும் பல்வேறு தொழில்களில் தேக்க நிலை போன்றவை பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. போக்குவதற்கு மத்திய அரசு ஊக்கம் அளிக்கக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுவும் சந்தையில் எதிரொலித்தது.

பங்குச்சந்தைகளில் நேற்று காலை விறுவிறுப்பாக தொடங்கினாலும் பிற்பகலில் மந்தமாக இருந்தது. பெரும் சரிவுடன் வர்த்தகம் நேற்று நிறைவு பெற்றது. வேதாந்தா, எஸ் பாங்க், பஜாஜ் பைனான்ஸ், இன்டுஸ்லாண்ட் பாங்க், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், சன் பார்மா, எச்டிஎப்சி பாங்க், எஸ்பிஐ ஆகிய பங்குகளின் விலை 3 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்தது. இதனால் பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் முடிந்தது. அதேவேளையில் ஐடிசி, எச்யுஎல், கோடக் பாங்க், டிசிஎஸ் மற்றும் டெக்எம் ஆகியவற்றின் பங்குகள் விலை 1.37 சதவீதம் ஏற்றம் பெற்றிருந்தது. வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் கடந்த புதன்கிழமை ₹770.81 கோடிக்கு ½ங்குகளை விற்றனர். அதேவேளையில், உள்ளூர் நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் ₹353.97 கோடிக்கு பங்குகள் வாங்கியுள்ளது புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

* சர்வதேச அளவில் பொருளாதாரம் நிலை தேக்கம் அடைந்துள்ளது. இது முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியதால், பங்குச்சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று சரிவை சந்தித்தது.
* ஆசிய பங்குச்சந்தைகளான ஹாங்காங், கொரியா, ஷாங்காய், ஜப்பான் போன்றவற்றிலும் நேற்று காலையில் பங்குகள் விற்பனை எதிர்மறையாகவே இருந்தது. இதுவும் இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களை பீதியில் ஆழ்த்தியது.

Tags : Sensex, Nifty decline
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...