நாமக்கல் முட்டை விலை 358 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் கடந்த 20ம் தேதி முதல் தினமும் முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தினசரி காலை 9 மணிக்கு முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. முட்டைக்கு விலை நிர்ணயம் செய்யும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் நேற்று ஒரு முட்டையின் பண்ணை பரிந்துரை விலையில் 10 காசுகள் குறைத்து 358 காசுகளாக நிர்ணயம் செய்துள்ளார். மற்ற மண்டலங்களில் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதால் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: