தொழில் நெருக்கடியால் ஜாப்-ஒர்க் நிறுவனங்களில் 50 லட்சம் பேர் வேலையிழப்பு

திருப்பூர்:  திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் பஞ்சாலைகள், பின்னலாடைகள், விசைத்தறி கூடங்கள், நெசவு ஆகிய தொழிற்சாலைகள் லட்சக்கணக்கில் இயங்கி வருகிறது.  ஏற்றுமதி செய்யும் பின்னலாடை நிறுவனங்கள் நூல் கொள்முதல் செய்து நிட்டிங், பிளிச்சிங், டையில், வாஷிங், ப்ரிண்டிங், காம்பாக்டிங், எம்ப்ராய்டரி, அயர்னிங், பேக்கிங் ஆகியவற்றை சிறு, குறு நிறுவனங்களுக்கு ஜாப்-ஆர்டர் கொடுத்து பொருட்களை திரும்ப வாங்கி கட்டிங், சிங்கர், லேபிள் ஆகிய பணிகள் செய்து முழு உருவம் கொடுக்கின்றனர்.   காடா துணி உற்பத்தியில் மொத்த விற்பனை விசைத்தறி உரிமையாளர்கள் நூலை கொள்முதல் செய்து  கூலிக்கு தறி ஓட்டும் நபர்களுக்கு ஜாப்-ஒர்க் கொடுக்கின்றனர்.  திருப்பூரில் உள்ள கார்பரேட் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களை நம்பி லட்சக்கணக்கான ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. நான்கு மாவட்டங்களில் மட்டும் பின்னலாடை, விசைத்தறி,இன்ஜினியரிங் உட்பட பல்வேறு தொழிற்சாலைகளை நம்பி 2 கோடிக்கு மேல் தொழிலாளர்கள் உள்ளனர்.

ஜி.எஸ்.டி. புதிய வரி விதிப்பு நடைமுறைக்கு வராத போது சிறு, குறு நிறுவனங்கள் எந்த வரியும் செலுத்தாமல் தொழிலாளர்களுக்கு சம்பளம் மட்டும்  கொடுத்து தொழிலை நடத்தி வந்தனர்.  பெரிய நிறுவனங்கள் ஒரு பொருளை ஜாப்-ஒர்க் கொடுக்கும் போது சிறு, குறு நிறுவனங்களிடையே மதிப்பீடு கேட்பார்கள். அதில், குறைவான மதிப்பீடு கொடுக்கும் சிறு, குறு நிறுவனங்களிடம் ஒப்பந்தத்தை  ஏற்படுத்தி வேலைக்கான ஆர்டர் கொடுப்பது வழக்கம்.  ஏற்கனவே பல்வேறு போட்டிக்கிடையே குறைந்த லாபத்தில் வேலை எடுத்து தொழிலாளர்களுக்கு சம்பளம், கரண்ட் பில், கட்டிட வாடகை, இயந்திரங்கள் தேய்மானம் ஆகியவற்றுக்கு செலவு செய்கின்றனர். ஜி.எஸ்.டி.யில் 5 சதவீதம் வரி என்பதே  சிறு, குறு நிறுவனங்கள் தொடர்ந்து தொழில் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறு, குறு தொழில் துறையினர் கூறியதாவது:

 திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஏற்றுமதி செய்யும் பின்னலாடை நிறுவனங்களை நம்பித்தான்  நிட்டிங், பிளிச்சிங், டையில், வாஷிங், ப்ரிண்டிங், காம்பாக்டிங், எம்ப்ராய்டரி, அயர்னிங், பேக்கிங் ஆகியவற்றை இயக்கும் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன. ஏற்கனேவே பல்வேறு போட்டிகளிடையே குறைந்தபட்ச கூலிக்கு வேலை எடுத்து செய்து வருகிறோம்.  இந்நிலையில் ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதம் என்பதை உறுதிப்படுத்தியதால் ஜாப்-ஒர்க், பவர் டேபிள், கூலிக்கு விசைத்தறி இயக்கும் உரிமையாளர்கள் ஆகியோர் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலையுள்ளது. இந்தியா முழுவதும் 10 லட்சத்திற்கு மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் தங்களுடைய இயக்கத்தை நிறுத்திக்கொண்டதால் இதை நம்பியுள்ள 50 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் என்றனர்.

Related Stories: