காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்வு: மொபைல் சேவை தொடர்ந்து முடக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டு இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், கடைகள் மூடப்பட்டுள்ளதோடு, மொபைல் சேவை முடக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், இந்த மாநிலத்தை . இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அசு சமீபத்தில் பிரி்த்தது. இதனால், காஷ்மீர் மாநிலத்தில் போராட்டம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டன. ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது.  இந்நிலையில், அங்கு அமைதியான சூழல் நிலவி வருவதால் பல்வேறு பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. புதனன்று காஷ்மீரின் எந்த பகுதியிலும் வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை.

ஸ்ரீநகரின் பெரும்பாலான பகுதிகள் உட்பட காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் கடடுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல மாவட்டங்களிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கும் வகையில் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்த தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து பொதுமக்கள் நடமாட்டம் தொடங்கியுள்ளது. நகரில் வாகன போக்குவரத்தும் சிறிது சிறிதாக காணப்படுகின்றது. அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கார்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்டவை இயக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளின் வருகை அதிகரித்துள்ளது. எனினும் மாணவர்கள் அங்கு நிலவி வரும் சூழல் காரணமாக பள்ளிக்கு வருவதை தவிர்த்துள்ளனர். பிரைமரி பள்ளிகள் திங்கள் முதலும், நடுநிலை பள்ளிகள் புதன் கிழமையில் இருந்து மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் அமைதியான சூழல் நிலவியபோதும், கடைகள் மூடப்பட்டுள்ளன. மொபைல் மற்றும் இன்டெர்நட் சேவை 18வது நாளாக நேற்றும் முடக்கப்பட்டது.

Related Stories: