ஆலப்புழாவில் வரும் 31ம் தேதி உலகப்புகழ் பெற்ற நேரு கோப்பை படகு போட்டி: சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கிறார்

திருவனந்தபுரம்: ஆலப்புழாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 31ம் தேதி நடைபெற உள்ள உலக புகழ்பெற்ற  படகு போட்டியின் தொடக்க விழாவில் சச்சின் தெண்டுல்கர்  கலந்துகொள்கிறார்.கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஓணம் பண்டிகையை  முன்னிட்டு ஆண்டுதோறும் நேரு கோப்பைக்கான படகு போட்டிகள் நடப்பது வழக்கம்.  உலக  புகழ்பெற்ற இந்த படகு போட்டியை பார்ப்பதற்காக பல்வேறு நாடுகளில்  இருந்தும்  ஏராளமானோர் வருவார்கள். இந்த வருடம் முதல் இந்த படகு  போட்டியை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி  போன்று ‘சாம்பியன் போட் லீக்’  (சிபிஎல்) என்ற பெயரில் நடத்த  தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 9   அணிகள் பங்கேற்கின்றன.

வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசு தொகை 5.9 கோடியாகும். இந்த போட்டிக்கான தொடக்க விழா வரும் 31ம்  தேதி ஆலப்புழா புன்னமடக்காயலில் நடக்கிறது. முதல்வர் பினராய்  விஜயன் போட்டியை ெதாடங்கி வைக்கிறார்.  நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர்  கலந்து கொள்கிறார்.

Related Stories: