தாழ்த்தப்பட்ட மக்கள் குரலுக்கு மரியாதை: பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘தாழ்த்தப்பட்ட மக்களின் குரல்கள் ஒடுக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது,’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி  தெரிவித்துள்ளார்.  டெல்லியில் துக்ளகாபாத் பகுதியில் இருந்த ரவிதாஸ் கோயில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி வளர்ச்சி ஆணையத்தால் சமீபத்தில் இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தாழ்த்தப்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு இந்த மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில், போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும், ‘பீம் ஆர்மி’ தலைவர் சந்திரசேகர் அசாத் மற்றும் 50 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டysfG  காங்கிரஸ் பொதுrf செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட சகோதரிகள், சகோதர்களின் பாரம்பரிய சின்னமான ரவிதாஸ் கோயில் விவகாரத்தில் முதலில் பாஜ குழப்பமாக சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட சகோதர, சகோதரிகள் தலைநகரில் கோயிலுக்காக குரல் கொடுக்கையில் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. கண்ணீர் புகை குண்டு வீசியதோடு அவர்களை கைது செய்துள்ளது. இந்த மக்களின் குரல்கள் ஒடுக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. இது மிகவும் உணர்வுபூர்வமான விவகாரம். அவர்களின் குரலுக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: