×

சந்திரயான் 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ

பெங்களூரு: சந்திரயான் 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திரயான்-2  விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக கடந்த  மாதம் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவை நோக்கிய இதன் பயணத்தில் 30  நாட்கள் முடிந்துள்ளது. பூமியின் நீள்வட்டபாதையில் சுற்றி வந்த  சந்திரயான், சிறிது, சிறிதாக விலகி பூமியின் வட்டப்பாதையில் இருந்து  கடந்தவாரம் வெளியேறியது. இந்த நிலையில் நேற்று சந்திரயான்-2 நிலவின்  வட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது. நிலவின் மிக அருகில் சென்றுள்ள  சந்திரயான்-2  புதன் கிழமை காலை வெற்றிகரமாக இதன் சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டு, நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது.

அதன்பின் சுற்றுவட்டப் பாதையின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியாக செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்நிலையில், நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 2, நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ நிறுவனம் இன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. நிலவில் இருந்து 2650 கி.மீ தொலைவில் இருந்து சந்திரனின் புகைப்படத்தை சந்திராயன்-2 ல் உள்ள விக்ரம் லோண்டர் நேற்று நிலவின் முதல் புகைபடத்தை படத்எடுத்து அனுப்பியது. அந்த புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டது.


Tags : Chandrayaan 2, first photo of the moon, ISRO
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...