×

கடலூர் மாவட்டத்தில் 70 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகள் அழுகி இருந்ததால் அதிகாரிகள் ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்டம் மங்களூர் சுற்றுவட்டாரத்தில் ஆய்வு செய்த பின் மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வழங்கப்பட்டன. திட்டக்குடி அடுத்த மேலாதனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 76 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் சத்துணவு சாப்பிடும் 70 மாணவர்களுக்கு நேற்று வழங்கப்பட்ட முட்டைகள் அழுகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு முட்டைகள் வழங்காமல் நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் 10 சத்துணவு மையங்களில் முட்டைகள் கெட்டு போயிருந்ததாகவும் புகார்கள் பதிவாகின.

இதையடுத்து மங்களூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 123  சத்துணவு மையங்களில் வழங்கப்படும் முட்டைகளை ஆய்வு செய்ய சத்துணவு பிரிவு ஊரக வளர்ச்சி மேலாளர்  ஆறுமுகம் உத்தரவிட்டார். இந்த நிலையில் சத்துணவு மைய பொறுப்பாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்த பின் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டது.


Tags : Authorities,inspect nutritious,eggs supplied,70 students, Cuddalore district
× RELATED டெல்டா மற்றும் தென் கடலோர...