உலகளவில் பொருளாதார மந்தநிலை மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்டவற்றால் பங்குச் சந்தைகளில் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் சரிந்தது. உலகளவில் பொருளாதார மந்தநிலை மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்டவற்றால் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கட்டுமானம், உலோகம், மோட்டார் வாகனம், பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைப் பங்குகள் இன்று சரிவைச் சந்தித்தன.

Advertising
Advertising

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில்  650 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவடைந்து 36 ஆயிரத்து 391 புள்ளிகளாக குறைந்தது. பின்னர் சற்று மீண்ட போதும் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 587 புள்ளிகள் சரிவுடன் 36 ஆயிரத்து 472 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி வர்த்தக நேர முடிவில் 177 புள்ளிகள் சரிவுடன் 10 ஆயிரத்து 741 புள்ளிகளாக இருந்தது.

Related Stories: