×

'ப. சிதம்பரத்திடம் நீதிமன்றமே கேள்விகள் கேட்கலாம்' : நீதிமன்றத்தில் முன்வைத்த அனல் பறக்கும் வாதங்கள்..

டெல்லி : டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.இதனிடையே ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய சிபிஐயின் மனு மீதான தீர்ப்பை 5.30 அளவில் சிறப்பு நீதிமன்றம் வழங்குகிறது.   

ப. சிதம்பரம் நேற்று அதிரடியாக கைது


பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாயமான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ நேற்றிரவு அதிரடியாக கைது செய்தது. 27 மணி நேர தலைமறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்து விட்டு வீடு திரும்பியதும், சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை சுற்றிவளைத்து காரில் ஏற்றிச் சென்றனர். அவரிடம். சிபிஐ தலைமை அலுவலகத்தில் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

துஷர் மேத்தா, அபிஷேக் மனு சிங்வி இடையே வாக்குவாதம்

ப. சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முடித்த பின்பு, அபிஷேக் மனு சிங்வி வாதங்களை முன்வைத்தார். அப்போது, தன் மீதான வழக்கில் தன் கருத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க அனுமதி கேட்கிறார் ப.சிதம்பரம். இதற்கு சிபிஐ துஷர் மேத்தா எதிர்ப்பு தெரிவிக்கவே துஷர் மேத்தா, அபிஷேக் மனு சிங்வி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ப. சிதம்பரம் : நான் பேச வேண்டும்

(தன் மீதான வழக்கில் தன் கருத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க அனுமதி கேட்கிறார் ப.சிதம்பரம் )

துஷர் மேத்தா : குற்றம் சாட்டப்பட்டவர் பேசக் கூடாது.

அபிஷேக் மனு சிங்வி : குற்றம் சாட்டப்பட்டவர் பேசலாம், நீதிமன்ற தீர்ப்பு உள்ளது

((துஷர் மேத்தா, அபிஷேக் மனு சிங்வி இடையே வாக்குவாதம்))

துஷர் மேத்தா : சிதம்பரம் சாதாரண மனிதர் அல்ல.. அவர் படித்தவர்.. சட்டம் அறிந்தவர்..பதில் சொல்லாமல் தட்டிக் கழிப்பது எப்படி என அவருக்கு தெரியும்.

துஷர் மேத்தா : கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு, காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்

துஷர் மேத்தா : சிதம்பரம் ஒன்றும் சாதாரணமானவர் இல்லை ; எந்த கேள்விகளுக்கும் பதில் தராமல் இருக்கும் வலிமை படைத்த ஒருவர்

துஷர் மேத்தா : தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது , காவலில் எடுத்து விசாரிக்க கோருவது எங்கள் உரிமை, அதற்கான தேவையும் உள்ளது

துஷர் மேத்தா :  சிதம்பரத்தை சுற்றியிருக்கும் பாதுகாப்பு வளையத்தை நீக்காமல், எங்களால் உண்மையை நெருங்க முடியாது

துஷர் மேத்தா : குற்றத்தின் தன்மையை உணர்ந்து , முன் ஜாமினை மறுத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போதுதான் அந்த பாதுகாப்பு வளையம் உடைந்தது.

துஷர் மேத்தா :  விசாரிப்பது எங்கள் உரிமை, அதனை யாரும் மறுக்க முடியாது.

துஷர் மேத்தா :  முன்னாள் அமைச்சர் என்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ சிதம்பரத்திற்கு சலுகைகள் வழங்க முடியாது.

துஷர் மேத்தா : சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பதில் சிபிஐ உறுதியாக உள்ளது.

துஷர் மேத்தா : தப்பிச் செல்வார் என்பதெல்லாம் இங்கு தேவையற்ற ஒன்று ; நாங்கள் நிபுணர்களோடு போராடிக் கொண்டிருக்கிறோம் , சரியான வழியை கண்டறியாவிட்டால் தோற்று விடுவோம்

கபில் சிபல் : கேள்விகளை  சி.பி.ஐ பொதுவாக வெளியிட வேண்டாம் ஆனால் அந்த கேள்விகளில் உண்மை இருக்க வேண்டும் எனவே விரும்புகிறோம்.

((சிதம்பரத்தை பேச அனுமதிக்குமாறு கபில் சிபில் நீதிபதியிடம் கோரிக்கை .சிதம்பரம் பேச அனுமதி))

((நீதிமன்றத்தில் தன் தரப்பு மீதான வாதத்தை துவக்கினார் சிதம்பரம்)).

ப.சிதம்பரம் : ஜூன் 6, 2018-ல் விசாரணை நடத்தினார்கள். அதனை வரவழையுங்கள். எந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை என பாருங்கள்.

 ப.சிதம்பரம் : வெளிநாட்டு வங்கிகளில் எனக்கு கணக்கு இல்லை.. மகனுக்கு மட்டுமே கணக்குகள் உள்ளது.

ப.சிதம்பரம் : கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி சிபிஐ கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன்.

((சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கும் மனு மீதான தீர்ப்பு 30 நிமிடங்கள் ஒத்திவைப்பு))

வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், சிதம்பரத்துக்கு ஜாமின் கோரும் மனு மீதும், சிபிஐயின் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரும் மனு மீதும் நீதிபதி 30 நிமிடத்தில் தீர்ப்பு வழங்க இருக்கிறார்.

Tags : Finance Minister, Chidambaram, CPI, Warrant, INX Media
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்