நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்

வெலிங்டன்: நியூசிலாந்தில் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவரது குழந்தைக்கு சபாநாயகர் புட்டிப் பாலூட்டினார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பியாக இருப்பவர் டமாடி கோபி. இவருக்கு கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவர் தனது குழந்தை  ஸ்மித்துடன் நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்தார்.   தனது குழந்தையை தூக்கி வைத்துக்ெகாண்டே சபையில் விவாதத்தில் பங்கேற்றார். இதைக் கண்ட சபாநாயகர் ட்ரவர் மல்லார்ட், குழந்தையை வாங்கி தனது மடியில் வைத்து பாட்டிலில் பாலூட்டினார்.

இவரின் இந்த செயலுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. தற்போது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பொதுவாக சபாநாயகர் இருக்கை என்பது அவையை நடத்துபவர்களுக்கு உரியது. ஆனால் இன்று ஒரு மிக முக்கியமான மனிதர் என்னுடன் இந்த நாற்காலியை பகிர்ந்து கொள்கிறார். எம்.பி. டமாடி கோபி மற்றும் அவரது மனைவி டிம் இருவருக்கும் உங்களது குடும்பத்தின் புதிய வரவுக்காக மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: