தொங்கும் வீடுகள்!

நன்றி குங்குமம்

கடற்கரையை ஒட்டிய மலைக்குன்றுகளின் உச்சியில் அமர்ந்து கடலை ரசித்திருப்போம். நம் உடலை வருடும் கடல் காற்றின் சுகத்தில் நேரம் போவதே தெரியாமல் அங்கேயே பல மணி நேரம் உட்கார்ந்திருப்போம். இந்த மாதிரியான இடத்தில் நமக்காக ஒரு வீடு இருந்தால் எப்படியிருக்கும் என்று கனவு கூட கண்டிருப்போம்.

இந்தக் கனவு ‘மாட்ஸ்கேப்’ என்ற நிறுவனத்தின் காதுகளுக்கு எட்ட, ஆஸ்திரேலியாவில் உள்ள ஓர் உயர்ந்த மலைக்குன்றின் ஓரத்தில் கடல் மட்டத்துக்கு மேல் ஐந்து அடுக்குகளைக் கொண்ட தொங்கும் வீட்டைக் கட்டியிருக்கிறது! லிஃப்ட் உட்பட அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய இந்த வீட்டை ‘க்ளிஃப் ஹவுஸ்’ என்று அழைக்கின்றனர். இந்தத் திட்டம் வெற்றிபெற்றால் கடலை ஒட்டிய ஒவ்வொரு மலைக்குன்றையும் க்ளிஃப் ஹவுஸ் அலங்கரிக்கும் என்று கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்கின்றனர் ‘மாட்ஸ்கேப்’ நிறுவனத்தினர்.     


Tags : Hanging house, Australia, hill
× RELATED நாகர்கோவில் அருகே மலையில் பயங்கர தீ