×

சென்னை தினத்தையொட்டி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் வாழ்த்து

சென்னை: சென்னை தினத்தையொட்டி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலைநகரமாக சென்னை உள்ளது. 1996ம் ஆண்டுக்கு முன்னர் மெட்ராஸ் என்றே அழைக்கப்பட்டு வந்தது. உலகின் மிக பழமையான மாநகராட்சி கொண்டுள்ள நகரம்; பழமையின் சுவடுகள் மாறாது புதுமையை புகுத்தி மிகப்பெரிய வளர்ச்சியை கண்ட நகரம் என்ற பெருமையை பெற்றது சென்னை. முதல் முறையாக சென்னைக்கு வருபவர்கள் பார்க்க விரும்பும் முதல் இடம் என்றால் அது சென்னை மெரினா தான். ஆசியாவிலேயே இரண்டாவது நீளமான கடற்கரை என்று சொல்லப்படும் மெரினாவில் எல்லா நாட்களிலும் மக்களின் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

அந்த மெரினாவிற்கு புகழ் சேர்க்கும் விதமாக அமைந்தது தான் தமிழர்களின் வீரத்திற்காக போராடிய ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டம் “மெரினா புரட்சி” என்றே பெயர் பெற்றது. வேலைக்காகவும், படிப்பிற்காகவும் சொந்த மாவட்டங்களையும், வீட்டையும் விட்டு வெளியேறும் பலருக்கும் சென்னை இன்றளவும் அடைக்கலமாக இருந்து வருகிறது என்பது உண்மை. எத்தனை சுனாமிகள், புயல்கள், வந்தாலும் அனைத்தையும் தாங்கிக்கொண்டு கம்பீரத்துடனும், வசீகரத்துடனும் நிமிர்ந்து நின்று தன்னை நம்பி வருபவர்களை அள்ளி அணைத்து கொள்ளும் சென்னைக்கு இன்று 380வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணி வீரரான ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்; கலீஜ்,டௌலட்,பிசுக்கோத்,நைனா, ஓசி,பிஸ்து,அட்டு,பேஜார், அள்ளு,தல,மாமி,மாமே,இப்பிடி எத்தனை வார்த்தைங்க நம்ம சென்னையை அலங்கரிக்க.ஆதார் கார்டு இல்லாதவங்களுக்கும் அட்ரஸ் நம்ம மெட்ராஸ் தாங்க.சென்னை என்பது ஊர் பெயர் மெட்ராஸ் என்பது உணர்ச்சி என கூறியுள்ளார்.


Tags : Chennai Day, Harbhajan Singh, Greetings
× RELATED கர்நாடகாவில் ஒரே நாளில் 25,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி