×

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் போன்று செயல்படுகிறார்: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார் என்பது தெரியாத நிலையில் லுக் அவுட் போஸ்டரும் பிறப்பிக்கப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றார். சிபிஐயின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் அடைத்து வைக்கப்பட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகத் தெரிவித்தார். இதில் தி.மு.க. அழைப்பை ஏற்று பங்கேற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

டெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட 14 கட்சியினர் பங்கேற்றுள்ளனர். உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்று தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்படவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அமைச்சர் ஜெயக்குமார் குறித்த கேள்விக்கு அவர் ஒரு ஜோக்கர் என மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். இதில் இன்று டெல்லியில் திமுக முன்னின்று பல்வேறு கட்சிகளின் ஒத்துழைப்புடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் காஷ்மீரில் வீட்டு காவலில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் மந்திரிகள் வெளியிடப்பட வேண்டும் என்பதே ஆகும். மேலும் காஷ்மீரில் சுமூக நிலையை கொண்டு வர வேண்டும் என கூறினார்.


Tags : Minister Jayakumar ,like, Joker: Interview , MK Stalin
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...