×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.


Tags : Due to atmospheric overlap and convection, atmospheric overlap , convection, rainfall,Tamil Nadu, Puducherry ,2 days
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...