×

காரைக்குடியில் குண்டும், குழியுமான கழனிவாசல் சாலை... வாகன ஓட்டிகள் அவதி

காரைக்குடி: காரைக்குடியில் கழனிவாசல் சந்திப்பு சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். காரைக்குடி நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டப்பணி நடந்து வருவதால், பெரும்பாலான சாலைகள் கடந்த 4 ஆண்டுகளக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, கழனிவாசல் குடிநீர் தொட்டி சாலை சந்திப்பு குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக மதுரை, திருச்சி, சென்னை, பரமக்குடி, திண்டுக்கல் செல்லும் பஸ்களும் மற்ற ஊர்களில் இருந்து வரும் பஸ்களும் வந்து செல்கின்றன. மேலும், கழனிவாசல் சந்திப்பில், பள்ளிகள் உள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கரவாகனங்கள், லாரிகள் வந்து செல்கின்றன. இந்த சாலை பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது பாதாளச்சாக்கடை பணிகளை மேற்கோள் காட்டி, புதிதாக அமைக்கப்படவில்லை. எனவே, கழனிவாசல் சாலை சந்திப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதிவாசி சக்திசுமன் கூறுகையில், ‘இப்பகுதி சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. தினசரி டூவீலர் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு மழையோடு சென்ற இருவர் சாலையில் இருந்த பள்ளம் தெரியாமல் விழுந்ததில் கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை. உடனடியாக தார்ச்சாலை போடாவிட்டாலும் செப்பனிடலாம். இனி வரும் காலம் மழை காலம் என்பதால் நகராட்சி நிர்வாகம் பேஜ் ஒர்க்காவது உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

Tags : Karaikudi, road
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாய்...