×

போக்குவரத்து விதிகளை மீறினால் முதலமைச்சருக்கும் அபராதம் விதிக்கப்படும்: நிதின் கட்கரி

டெல்லி: போக்குவரத்து விதிகளை மீறினால் இனி முதலமைச்சரே ஆனாலும் அபராதம் செலுத்த வேண்டி வரும் என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் போக்குவரத்து சட்டங்களை தவறாக பயன்படுத்தும் அந்த துறை சார்ந்த அதிகாரிகளை கண்காணிக்கும் பொருட்டு அதிநவீன நுண்ணறிவு போக்குவரத்து கண்காணிப்பு சாதனங்கள் மாநிலங்கள் அனைத்திலும் பொறுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்க மோட்டார் வாகன திருத்த மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த புதிய சட்டம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கிறது. இந்த நிலையில் சாலை போக்குவரத்து விதிகளை மீறினால் முதலமைச்சரும் அபராதம் செலுத்த வேண்டும் என கட்கரி தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இனி வரும் காலங்களில் வாகன ஓட்டுனர்கள் போக்குவரத்து காவர்களுக்கான ஏ.டி.எம் இயந்திரங்களாக இருக்க மாட்டார்கள் என்றும் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

உபேர், ஓலா போன்ற கால் டாக்ஸி நிறுவனங்களுக்கும் செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்கள் ஆண்டு ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் பேர் வீதம் வாகன விபத்துக்களில் பலியாவதாக குறிப்பிட்டுள்ள அவர் இந்த சட்டம் அந்த நிலையை வெகுவாக குறைக்க உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : Traffic Law, Violation, Chief Minister, Fines, Nitin Gadkari
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...