சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை

உலகின் மிக நீண்ட கடற்கரை கொண்ட நகரம்; உலகின் மிக பழமையான மாநகராட்சி கொண்டுள்ள நகரம்; பழமையின் சுவடுகள் மாறாது புதுமையை புகுத்தி மிகப்பெரிய வளர்ச்சியை கண்ட நகரம் என்ற பெருமையை பெற்றது சென்னை. பெருமைகள் பலவற்றை தன்னகத்தே கொண்டிருக்கும் சென்னை நகருக்கு இன்று 379-வது பிறந்த நாள்.

2,000-ம் ஆண்டு பழமை

சென்னை 379-வது வயது என்று கூறி பிறந்த நாள் கொண்டாடி வந்தாலும் உண்மையில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாக கருதப்படுகிறது. திருக்குறளை எழுதிய திருவள்ளூவர் மயிலாப்பூரை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் போன்றவை நகரத்தின் பழமையை பறைசாற்றி வருகிறது.

பழமைக்கு சான்று

சென்னையில் பரபரப்பாக இருக்கும் மயிலாப்பூர், கோயம்பேடு, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகள் ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே முக்கியமாகி இருந்த பகுதிகள் தான். கிருஷ்ணகிரியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டே இதற்கு சான்றாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். அதில் நீலாங்கரை, ராயபுரம் போன்ற துறைமுக பகுதிகளுக்கு பொருட்களை கொண்டு சேர்க்க விதிக்கப்படும் வரிகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றதாம்.

சென்னபட்டனம் உதயம்

தற்போது போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சென்னை, சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பூவிருந்தவல்லியை சேர்ந்த சென்னப்பன் நாயக்கரின் ஆளுமைக்கு உட்பட்ட மீன்பிடி தளமாக இருந்தது. கடந்த 1,639-ம் ஆண்டு வர்த்தக தளம் கட்டுவதற்கு இந்த பகுதியை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி சார்பில் பிரான்சிஸ் டே என்பவர் வாங்கினார். இதனாலேயே இந்த பகுதிக்கு சென்னப்பட்டினம் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

சென்னை பிறந்த நாளில் சர்ச்சை

1,639-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தான் சென்னப்பட்டினத்தை வாங்கியதற்கான ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் அதற்கான ஆவணங்கள் 1,746-ம் ஆண்டு வரை செயின் ஜார்ஜ் கோட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சென்னப்பநாயக்கருக்கும், கம்பெனிக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை குறிக்கும் வகையிலான தங்க செப்பேடு ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியானதாகவும் கருத்து நிலவுகிறது. அந்த நாள் தான் தற்போது சென்னை பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

சென்னை நகராக மாறிய மெட்ராஸ்

ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி மெட்ராஸை மையப்படுத்தி ஏற்படுத்திய மாகாணம் மெட்ராஸ் மாகணம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. மொழிவாரி மாநிலங்கள் உருவான பிறகும் மெட்ராஸ் மாநிலமாகவே அழைக்கப்பட்டு வந்த நிலையில் 1,969-ம் ஆண்டு தான் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது. ஆனாலும் தலைநகருக்கு மெட்ராஸ் என்ற பெயரே இருந்தது. 1,996-ம் ஆண்டு தான் மெட்ராஸ் என்பது மாற்றப்பட்டு சென்னை என பெயர் சூட்டப்பட்டது.

செயின் ஜார்ஜ் கோட்டை

தற்போது தமிழக அரசின் தலைமை செயலகம் இயங்கி வரும் செயின் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது தான். கோட்டைக்குள்ளே இருக்கும் புனிதமேரி தேவாலயம் 1,678-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தியாவின் மிக பழமையான ஆங்கிலிக்கன் தேவாலயம் இதுவாகும். ராபர்ட் கிளை வசித்து வந்த கிளைவ் மாளிகை அங்காட்சியகம் கோட்டைக்கு உள்ளே அமைந்துள்ள முக்கிய பகுதிகளாகும்.

பழமைவாய்ந்த மாநகராட்சி

சென்னை மாநகராட்சி லண்டனுக்கு பிறகு உலகில் பழமை வாய்ந்த 2-வது மாநகராட்சி என்ற பெருமையை பெற்றுள்ளது. 1,688-ம் ஆண்டு பிரிட்டன் அரசர் இரண்டாம் ஜேம்ஸ் மெட்ராஸ்-க்கு நகராட்சி அந்தஸ்தை வழங்கினார். இதனை மையப்படுத்திய பகுதிகள் மெட்ராஸ் மாகாணமாக உருவானது.

உயர்நீதிமன்ற வளாகம்

பாரிஸ் கார்னர் பகுதியில் இருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் 1,682-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த உயர்நீதிமன்ற வளாகம் லண்டனுக்கு பிறகு 2-வது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமாக கருதப்படுகிறது. இங்கு உயர்நீதிமன்றம் கட்டப்படுவதற்கு முன்பாக 1817-ம் ஆண்டு முதல் 1682-ம் ஆண்டு வரை தற்போது சென்னை கடற்கரை ரயில் நிலையம் அமைந்திருக்கும் இடத்திற்கு எதிரே உள்ள இடத்தில் தான் நீதிமன்றம் அமைந்துள்ளது.

சென்னை சிறப்புகள்

1990கள் வரை சென்னை என்றாலே LIC பில்டிங்தான் நினைவுக்கு வரும். அந்த காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கட்டிடமாக இருந்தது. 1,844-ம் ஆண்டு முதல் இன்று வரை அண்ணாசாலையில்     இயங்கி வரும் ஹிக்கின் பாக்ம்ஸ் புத்தகக்கடை இந்தியாவின் பழைய புத்தகக்கடையாகும். அதே போல ஸ்பென்சர் பிளாசாவும் இந்தியாவில் தொடங்கப்பட்ட மிகப்பழைய வணிக வளாகமாகும்.

Related Stories: