எம்.பி.யாக தேர்வு மன்மோகன் சிங்குக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ராஜ்யசபா எம்பியாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு திமுக தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: மன்மோகன் சிங் மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய அனுபவம், ஞானம், தலைமை பண்பு நாடாளுமன்றத்திற்கு பயன் உள்ளதாக அமையும். இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: