வாக்காளர் பட்டியல் தகவல்கள் பொதுமக்கள் சரிபார்க்கலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்களை பொதுமக்கள் சரிபார்த்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்களை சரிபார்க்க வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பொதுமக்கள் வரும் செப். 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களின் தகவல்களை சரிபார்த்து கொள்ளலாம். பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை,  ரேஷன் கார்டு, பான் கார்டு, பிறப்பு சான்றிதழ், 8 மற்றும் 10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு சேமிப்பு புத்தகம் உள்ளிட்ட 14 வகையான ஆவணங்களை கொண்டு தகவல்களை சரிபார்த்து கொள்ளலாம். அதன்படி பொதுமக்கள் ஓட்டர் ஹெல்ப்லைன் செயலி, தேசிய வாக்காளர் சேவை இணையதளம், பொது சேவை மையங்கள், வாக்காளர் பதிவு அதிகாரிகள், பூத் அலுவலர்கள் ஆகியோரிடம் சரிபார்த்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Related Stories: