தமிழகத்தில் 3 மாதங்களில் 791 கொத்தடிமைகள் மீட்பு : அமைச்சர் நிலோபர் கபில் பேச்சு

சென்னை:  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர்  நிலோபர் கபில், சென்னை, தி.நகரில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு ஒரு நாள் பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர்  பேசியதாவது: கொத்தடிமை முறையிலிருந்து  விடுவிக்கப்படும்  தொழிலாளர்களுக்கு உடனடி மறு வாழ்வு நிவாரண தொகையாக 20,000 மற்றும்  குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், வீட்டுமனை, பட்டா, வேலைவாய்ப்பு கல்வி,  தொழிற்திறன் பயிற்சி,  சுய உதவி குழுக்களில் உறுப்பினராக சேர்த்தல் மற்றும் மருத்துவ வசதிகள்  ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

கொத்தடிமை தொழில் முறையில் இருந்து மீட்கப்பட்ட மறு வாழ்வுக்கான நிவாரண தொகையும் வழங்கப்படுகிறது.  01.04.2019 முதல்  31.07.2019 வரையிலான காலத்தில் 163 தொழிலாளர்கள் என மொத்தம் 791 கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ரூபாய் 121.48 லட்சம் உடனடி நிவாரண தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் நிலோபர் கபீல் பேசினார்.

Related Stories: