குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது

தென்காசி:  குற்றாலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென வெயில் அடித்தது. நேற்று முன்தினம் மதியத்திற்கு பிறகு வெயில் மறைந்து இதமான சூழல் நிலவியது. மேற்குத்தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக இரவு ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதனால் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் இரவு ஐந்தருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று அதிகாலை வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து தடை விலக்கப்பட்டது.   மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது.  ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.  பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் சுமாராக விழுகிறது. ஆடி மாதம் நிறைவடைந்ததால் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தபோதும் சுற்றுலா பயணிகளின் வருகை சுமாராகவே உள்ளது. இதனால் அவர்கள் கியூவில் காத்திருக்காமல் வெகுநேரம் குளித்து மகிழ்ந்தனர்.

Related Stories: