×

இலங்கை கடற்படை அட்டூழியம் தமிழக மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

தொண்டி:  தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து வருகின்றனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. மீனவர்கயைும், அவர்களது படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்படுகிறது. அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தாததால், மீனவர்களின் கைது மற்றும் படகுகள் பறிமுதல் நடவடிக்கை தொடர்கிறது. கடந்த ஜூலை 11ம் தேதி நம்புதாளையை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இலங்கை அரசு விடுவித்த நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு திரும்பினர். நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே செம்புமகாதேவிபட்டினம் கடல் பகுதியிலிருந்து, ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் தொண்டீஸ்வரன், முத்துமாரி, தனிக்கொடி, ராமலிங்கம் ஆகிய 4 பேர் மீன் பிடிக்க சென்றனர். அவர்களை, இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து, படகையும் பறிமுதல் செய்தனர்.

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கூறுகையில், ‘‘இந்திய கடல் எல்லைக்குள்ளேயே வந்து இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை பிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இந்திய கடல் எல்லைக்குள்ளேயே நிம்மதியாக மீனவர்கள் மீன் பிடிக்க முடியாத நிலைதான் உள்ளது. பிடிபட்ட 4 பேரையும் உடனே விடுதலை செய்து, பறிமுதல் செய்த படகையும் விடுவிக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Sri Lankan Navy arrests, four fishermen
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...