ஆட்டோமொபைல் தொழில் பாதிக்காமல் இருக்க மின்சார கார் தயாரிப்பு இப்போதைக்கு இல்லை,..மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி: ஆட்டோமொபைல் தொழில் நசிந்து வருவதால் தொழிலாளர்கள் வேலையிழக்கும்  அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால்,  மின்சார வாகனங்கள் தயாரிப்பை விரைவு படுத்தும் முடிவை அடுத்த சில  மாதங்களுக்கு காலதாமதம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல்,  ஐசிஇ இன்ஜின் பொறுத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 150 சிசி  வரையிலான இரு சக்கரவாகனங்கள் விற்பனையை 2023ம் ஆண்டுக்கு பின்னர் விற்பனை  செய்வதை தடை செய்ய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த முடிவையும் விரைவு  படுத்தாமல் காலதாமதம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள்  தெரிவித்தன. ஆட்டோமொபைல் தொழில் அடியோடு பாதிக்கப்படாமல்  படிப்படியாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியை செய்யலாம்  சிறிது சிறிதாக அறிமுகம் செய்யலாம்.

மின்சாரத்தில்  இயங்கும் வாகனங்கள் அறிமுகம் செய்தால், தற்போது நடைமுறையில் உள்ளபெட்ரோல்,  டீசல் வாகனங்களின் பயன்பாடு படிப்படியாக குறையும் என்பதாலும் தற்போது  இதுபோன்ற வாகனங்களை வாங்கினால் பிரச்னைகள் வரும் என்பதாலும் பெரும்பாலான  மக்கள் வாகனங்கள் வாங்காமல் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் பொருளாதார  மந்தநிலையால் மக்களிடம் வாங்கும் சக்தியும் குறைந்துள்ளதாகக்  கூறப்படுகிறது. இதுபோன்ற நிலைமையை கருத்தில் கொண்டு அரசு எந்த  நடவடிக்கையையும் விரைவுபடுத்த அரசு விரும்பவில்லை. கார்  உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா  சீதாராமன், தொழில்கள் துறை அமைச்சர் அரவிந்த் சாவந்த் ஆகியோரை சந்தித்து  பேசினர். அப்போது, மின்சார வாகனங்கள் தயாரிப்பை விரைவு படுத்த அரசு  அழுத்தம் தருவது, வாகனங்கள் பதிவு கட்டணம் அதிகரிப்பு, குறிப்பிட்ட  ராகனங்களுக்கு கடை விதித்தல் உள்பட பல பிரச்னைகளால்தான் ஆட்டோமொபைல் தொழில்  தற்போது பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

கடந்த 18 ஆண்டுகளில்  இல்லாத அளவிற்கு ராகனங்கள் விற்பனை சரிந்துள்ளது என்று எடுத்துக்  கூறப்பட்டது. இதற்கிடையில், BS-IV வாகனங்கள் பதிவை ஏப்ரல் 1ம்  தேதிக்கு பின்னரும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் முன்  வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்காங்கள் மார்ச் முடிய உற்பத்தி செய்த  வாகனங்களை விற்க முடியும் என்று எடுத்துக் கூறியுள்ளனர். இது குறித்து அரசு  பரிசீலனை செய்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

* ஆட்டோமொபைல் தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை கருத்தில் கொண்டு, அந்த  தொழிலுக்கு உதவும் வகையில், அடுத்த சில மாதங்களுக்கு மின்சார வாகனங்கள்  உற்பத்தியை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்காமல் இருக்க மத்திய அரசு முடிவு  செய்துள்ளதாகத் தெரிகிறது.

* இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ஐசிஇ)  பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையை 2023ம் ஆண்டுக்கு பின்னர்  தடை செய்ய அரசு உத்தேசித்து இருந்தது. அதேபோல், 150 சிசி வரை இன்ஜின் திறன்  கொண்ட இரு சக்கர வாகனங்கள் விற்பனைக்கும் தடை விதிக்க உத்தேசித்து  இருந்தது. இந்த சூழ்நிலையில், இந்த தடை முடிவை விரைவு படுத்தாமல் இருக்க  அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: