பெருங்களத்தூரில் மினி வேனில் கடத்திய 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: 3பேர் கைது

தாம்பரம்:  தாம்பரம் பெருங்களத்தூர் நெடுஞ்சாலையில் பீர்க்கங்கரணை காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனில் ₹20 லட்சம் மதிப்பிலான சுமார் 1338  கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 மினி வேன்களையும் போலீசார் காவல் நிலையம் எடுத்து சென்றனர்.மேலும் டிரைவர்கள் புது பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (34), ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த நூர் முகமது (22) மற்றும் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த பவுன்குமார் (23) ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில்  குட்கா பொருட்களை பீர்க்கங்காரணையை சேர்ந்த முனுசாமி (43) என்பவர் அதே பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அதனைத்தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் 3  பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 மினி வேன்கள் மற்றும் ₹64 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முனுசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

„திருவொற்றியூர் எஸ்.பி.கோயில் 2 வது தெருவை சேர்ந்தவர்  கிஷோர் (17). அதே பகுதி பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் பெரியார் நகர் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தபோது ஆட்டோவில் வந்த 2   வாலிபர்கள் அவரது செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். „மதுரவாயல் அமுதா நகரில் தனியார் நிறுவனம் 8 மாதமாக இயங்கி வந்தது. இதில் ₹10,000 முதலீடு செய்தால் 100 நாளில் இரு மடங்காக கிடைக்கும் என விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி 100க்கும் மேற்பட்டோர் பணம் கட்டினர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டது. புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். „ ராயபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்ற திருவொற்றியூரை சேர்ந்த சீனிவாசன் (52) என்பவரின் கையை பட்டாக்கத்தியால் வெட்டி 5 பேர் கும்பல் செல்போனை பறித்து சென்றது. அதேபோல் காசிமேடு பகுதியில் சென்ற ஆட்டோ டிரைவர் மற்றும் பயணி ஒருவரை கத்தியால் வெட்டி 2 பேர் செல்போனை பறித்து சென்றனர்.  புகாரின்பேரில் ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராயபுரம் மற்றும் காசிமேட்டை சேர்ந்த  நரேஷ் (24), லொடுக்கு சத்யா (25), ராமச்சந்திரன் (27), நவீன் (24), மணி (26) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

„ மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம் (45). இவரது செல்போன் கடையை கடந்த ஜூலை 27ம் தேதி உடைத்து நான்கு செல்போன்களை திருடிய செம்மஞ்சேரி பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த கரி (எ) பிரவீன் ஜோ (22),  முடிச்சூர், லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த சக்தி (எ) சக்திவேல் (21) ஆகிய இருவரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.„ பள்ளிக்கரணை பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பழைய குற்றவாளியான பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரை சேர்ந்த ஊசி (எ) உதயா (21) மற்றும் வேளச்சேரி, சசி நகரை சேர்ந்த இருளாஸ் (எ) கார்த்திக் (24), துரைப்பாக்கம்,  கண்ணகி நகர் சேர்ந்த சந்திரசேகர் (28) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 செல்போன், 15 சவரன் நகைகள் மற்றும் பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்தனர்.„ புழல் சிறைச்சாலை விசாரணை பிரிவு பகுதியில் சோதனை கண்டறியும் குழுவினர் நேற்று காலை சோதனை செய்தபோது கழிவறையில்  செல்போன் கிடந்தது. விசாரணையில் ஜாபர்கான்பேட்டை, பிவி காலனியை சேர்ந்த தினேஷ்குமார் (27)  என்பவரது செல்போன் என தெரியவந்தது. மேலும், குமரன் நகர் போலீசார், அவரை வழிப்பறி வழக்கில் கைது செய்து ஜூலை 12ம் தேதி புழல் சிறையில் அடைத்துள்ளனர். என தெரியவந்தது. இதுகுறித்து சிறை அலுவலர் உதயகுமார் புழல் காவல் நிலைத்தில் புகார் கொடுத்தார்.  புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: