புரோ கபடி ஜூனியர்ஸ் இறுதி போட்டியில் வேலம்மாள் - இவான்ஸ்

சென்னை: புரோ கபடி ஜூனியர்ஸ் தொடரின் பைனலில் வேலம்மாள் - இவான்ஸ் பள்ளி அணிகள் மோதுகின்றன.புரோ கபடி போட்டியுடன், ஒவ்வொரு களத்திலும் அந்த நகரில் உள்ள பள்ளிகளுக்கு இடையிலான புரோ கபடி ஜூனியர்ஸ் போட்டியும் நடைபெறுகிறது. சென்னை களத்தின்  தகுதிச்சுற்றில் விளையாட 12 அணிகள் தேர்வாகின. முதல்  போட்டியில் கவிபாரதி வித்யாலயா பள்ளி 26-6 என்ற புள்ளி கணக்கில்  சங்கர வித்யாகேந்திராவையும். இவான்ஸ் பள்ளி 33-1 என்ற புள்ளி கணக்கில கோல பெருமாள் பள்ளியையும்,  வேலம்மாள் பள்ளி 22-17 என்ற புள்ளி கணக்கில் ஜிஆர்  தங்கமாளிகையையும் வீழ்த்தின.  கண்ணகி நகர அரசு மேனிலைப்பள்ளி 32-3 என்ற புள்ளி கணக்கில் வேல்ஸ் வித்யாஸ்ரம் பள்ளியை அதிரடியாக வென்றது.

Advertising
Advertising

முதல் அரையிறுதியில்   இவான்ஸ் பள்ளி 21-12 என்ற புள்ளி கணக்கில் கவிபாரதி வித்யாலயாவை வீழ்த்தியது.  2வது அரையிறுதிப் போட்டியில் கண்ணகி நகர் அரசுப் பள்ளியை 11-25 என்ற புள்ளி கணக்கில் வேலம்மாள் பள்ளி வென்றது.  இறுதிப் போட்டியில் வேலம்மாள் பள்ளி-இவான்ஸ் அணிகள் மோதுகின்றன.

Related Stories: