ஒலிம்பிக் ‘டெஸ்ட்’ ஹாக்கி: இந்திய அணிகள் சாம்பியன்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் மைதானங்களின் தரத்தை பரிசோதிக்கும் வகையில் பலவகை விளையாட்டுப் போட்டிகள் ஒத்திகை  அடிப்படையில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஒலிம்பிக் முன்னோட்ட தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் ஹாக்கியில் இந்திய அணிகள் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளன.ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் நேற்று மோதிய இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. இந்திய வீரர்கள் ஹர்மான்பிரீத் சிங் (7வது நிமிடம்), ஷம்ஷெர் சிங்  (18’), நீலகண்ட ஷர்மா (22’), குர்சாஹிப்ஜித் சிங் (26’), மன்தீப் சிங் (27வது நிமிடம்) கோல் போட்டு அசத்தினர்.

Advertising
Advertising

மகளிர் பிரிவு பைனலில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. இந்திய வீராங்கனைகள் நவ்ஜோத் (11வது நிமிடம்), லால்ரேம்சியாமி (33வது நிமிடம்) கோல் அடித்தனர். ஜப்பான் சார்பில்  மினாமி ஷிமிஸு 12வது நிமிடத்தில் கோல் போட்டார். ஒலிம்பிக் முன்னோட்ட தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதால் இந்திய ஹாக்கி அணி வீரர், வீராங்கனைகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories: