தெலங்கானாவில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

திருமலை:தெலங்கானா மாநிலம், பத்ராத்திரி கொத்தக்கூடத்தில் உள்ள வனப்பகுதியில் சிறப்புப் படை போலீசார் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மாவோயிஸ்டுகள்  இருப்பதை அறிந்த போலீசார் அவர்களை சுற்றி வளைக்க முயன்றனர். இதையடுத்து மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில்  ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றவர்கள் வனப்பகுதியில் தப்பி ஓடிவிட்டனர்.


Tags : Maoist, shot dead , Telangana
× RELATED பாலக்காடு அருகே மாவோயிஸ்ட்...