சமூக நல்லிணக்கத்தை பாஜ அழிப்பதால் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவது சாத்தியமல்ல: சீதாராம் யெச்சூரி தாக்கு

புதுடெல்லி: ‘சமூக நல்லிணக்கத்தை பாஜ அழித்து வரும் சூழ்நிலையில், நாட்டில் பொருளாதார வளர்ச்சி  ஏற்பட சாத்தியமில்லை,’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.  பாஜ ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாகவும், பொருளாதார நிலையும் மோசமாக உள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தொடர்ந்து குற்றம்சாட்டி பேசிவருகிறார்.

இந்த நிலையில், நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சமூக நல்லிணக்கத்தை பாஜ அழித்து வருகிறது. மேலும், சமூகத்தின் மீது நஞ்சையும் பாய்ச்சி வருகிறது.

இந்த நிலையில், வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை. மேலும், பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதும் சாத்தியமில்லை. தற்போது 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பெரிய நிறுவனங்கள் மூடப்படுவதும், வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பதும் தொடர்கிறது. இந்த பிரச்னைக்கு பாஜ தீர்வு காணவில்லை. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வரும் நிலையில் பாஜ ஆர்எஸ்எஸ்சின் பாசிச கொள்கையை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: