×

ஹாலிவுட் நடிகர் டிவாய்னே ஜான்சன் ரகசிய திருமணம்: 2 பிள்ளைகள் பெற்ற பிறகு காதலியை மணந்தார்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் டிவாய்னே ஜான்சன் தனது நீண்ட நாள் காதலியுடன் 2 குழந்தைகள் பெற்ற பிறகு அவரை ரகசிய திருமணம் செய்துகொண்டார். மல்யுத்த போட்டிகளில் நடக்கும் டபிள்யூ டபிள்யூ எப் ஆங்கில சேனலில் தி ராக் ஜான்சன் என்ற பெயரில் பிரபலமானவர் டிவாய்னே ஜான்சன். பின்னர் ஹாலிவுட் படங்களில் நடிகரானார். தி மம்மி ரிட்டர்ன்ஸ், தி ஸ்கார்பியன் கிங், வாக்கிங் டால், ஃபியூரியஸ் 7, ஜூமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது காதலி லவ்ரா ஹாஸ்ஹியன். கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் டேட்டிங் செய்து காதல் ஜோடிகளாக வலம் வந்தனர்.

திருமணம் செய்துகொள்ளா மலே இவர்கள் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் இவர்கள்  ஹவாய் தீவில் 2 நாட்களுக்கு முன் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவலை டிவாய்னே தனது இணைய தள பக்கத்தில் தெரிவித்திருப்ப துடன் திருமண படங்களையும் பகிர்ந்திருக்கிறார். சந்தோஷமாக இருவரும் போஸ்தரும் புகைப்படத்துடன் இருவரும் லிப் டு லிப் முத்தம் பகிர்ந்து கொள்ளும் படமும் வெளியிட்டுள்ளார். டிவாய்னே ஏற்கனவே டேனி கார்சியா என்பவரை கடந்த 1997ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு சிம்வொன் கார்சியா என்ற மகள் உள்ளார். பின்னர் டேனி கார்சியாவிடம் கருத்துவேறுபாடு ஏற்படவே அவரிடம் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

Tags : Dewayne Johnson, secret marriage
× RELATED திருமண தடை, ஜாதக தோஷம் உள்ளவர்களுக்கு...