வேலூர் மாநகராட்சி பகுதியில் பயன்படாத போர்வெல்களில் மழைநீர் சேமிக்க முடிவு

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் கிணறுகள், பயன்படாத போர்வெல்களில் மழைநீர் சேமிக்கவும், தொண்டு நிறுவனங்கள் மூலம் 26 ஏரிகளை தூர்வாரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் வீடுகள், அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் அமைக்க வேண்டும் என்று 3 மாத கெடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை போன்றே சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

இதன் எதிரொலியாக வேலூர் மாநகராட்சியில் வீடுகள், அலுவலகங்கள் அனைத்திலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதா? என்ற கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள கிணறுகள், பயன்படாத போர்வெல்கள் எத்தனை உள்ளது என்று கணக்கெடுக்க மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின்னர் உடனடியாக அதில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி எல்லைக்குள் 26 ஏரிகளை தொண்டு நிறுவனங்கள் மூலம்  தூர்வார மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: