×

2வது சீசனுக்காக ஊட்டி தேயிலை பூங்கா சீரமைப்பு பணி தீவிரம்

ஊட்டி: 2வது சீசனுக்காக ஊட்டி அருேகயுள்ள தொட்டபெட்டா தேயிலை பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் முதல் மற்றும் இரண்டாம் சீசனின்போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். முதல் சீசனின் போது, தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இரண்டாம் சீசனின் போது வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இதற்காக, முதல் சீசன் போன்றே இரண்டாவது சீசன் காலமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்காக அனைத்து பூங்காக்களையும் தோட்டக்கலைத்துறையினர் தயார் செய்வது வழக்கம். இரண்டாம் சீசன் துவங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தற்போது அனைத்து பூங்காக்களும் தயார் செய்யும் பணியில் தோட்டக்கலைத்துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டா பகுதியில் உள்ள தேயிலை பூங்காவும் தற்போது தயார் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


Tags : Ooty Tea Park, renovation work, intensity
× RELATED திருப்பத்தூரில் உள்ள நகராட்சி பூங்கா...