×

நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நடிகை பிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நாவுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம்..!

இஸ்லாமாபாத்: நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நடிகை பிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நாவுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம் எழுதகியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ண தூதராகவும், செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்கியதற்கு ப்ரியங்கா சோப்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்திருந்தார். சோப்ரா கருத்துக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

நடுநிலை தவறிய கருத்தின் மூலம் பிரியங்கா சோப்ரா நல்லெண்ணத் தூதர் பதவிக்கான மாண்பை இழந்து விட்டதாக பாகிஸ்தானின் மனித உரிமை விவகாரங்களுக்கான அமைச்சர் ஸ்ரீரின் எம். மசாரி குற்றம் சாட்டியுள்ளார்.  நல்லெண்ணத் தூதர் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி ஐ.நா சபை தலைமைக்கு மசாரி கடிதமும் எழுதியுள்ளார். கடந்த பிப்ரவரி 26-ம் தேதி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஓன்றில் அணு ஆயுத போரை தூண்டுவதாக பிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் ஒருவர் நேரடியாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.


Tags : Goodwill Ambassador, Actress Priyanka Chopra, UN, Pakistan, Letter
× RELATED ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலுக்கு...