×

விண்வெளியில் தோட்டம்? காய்கறிகளும் பழங்களும் வளர்க்கத் திட்டம்

விண்வெளியில் விரைவில் தோட்டம் ஒன்றை அமைத்து, ஆராய்ச்சியாளர்கள் சொந்தமாகக் காய்கறிகளும் பழங்களும் வளர்க்கத் திட்டமிடுகின்றனர். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மை! இதுவரை ஆராய்ச்சியாளர்கள் முன்பே தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே விண்வெளிப் பயணங்களில் சாப்பிட்டுவந்தனர்.அவ்வப்போது, அவர்களின் பயணத்திற்கு இடையே பூமியிலிருந்து தோட்டத்தில் பறிக்கப்பட்ட காய்கறிகளும் பழங்களும் அனுப்பிவைக்கப்பட்டன.
 
ஆனால், செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லத் திட்டமிடும் ஆராய்ச்சியாளர்களுக்குச் சிரமம் காத்திருக்கிறது.அவர்கள் கிட்டத்தட்ட மூவாண்டுகள் வரை பயணம் மேற்கொள்ளவேண்டும்.அப்போது முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட உணவைத் தொடர்ந்து சாப்பிட்டால், ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்க மாட்டா.அதனால், சூரிய வெளிச்சமின்றி, மண்ணின்றி ஒரு தோட்டத்தை அமைப்பது குறித்துப் பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றனர், நாசா எனும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையத்தின் ஆராய்ச்சியாளர்கள். எதிர்காலத்தில் விண்வெளித் தோட்டத்தில் உருளைக்கிழங்கும், ஸ்ட்ராபெர்ரி பழங்களும் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.




Tags : Gardening in space? Plan to grow vegetables and fruits
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்