மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைவு

சேலம்: கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் குடிநீர்,விவசாய தேவைக்காக மேட்டூர் அணையையே நம்பி உள்ளனர். இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் வரத்துதானது வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர் வரத்து நேற்று காலை 27 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 20 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. ஆனாலும் அணையில் நீர் வரத்தை காட்டிலும் நீர் வெளியேற்றம் குறைவாக உள்ள நிலையில் தற்போதைய நீர் இருப்பு 87. 829 டிஎம்சியாக உள்ளது. 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.39 அடியாக இருக்கிறது.

கடந்த 12 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர் இருப்பு 67.065 டிஎம்சியாக உயர்ந்த நிலையில் டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதை தொடர்ந்து சரிவர தண்ணீர் இல்லாததால் சம்பா சாகுபடி பொய்த்து போன நிலையில் குறுவை சாகுபடியை எதிர்நோக்கி உள்ள டெல்டா பாசன விவசாயிகள் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட உள்ள தண்ணீருக்காக காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென தண்ணீர் குறைந்திருப்பது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: