குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு வெளிநாட்டு பறவைகள் கொண்டு வர ஏற்பாடு

சேலம்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு காட்டெருமை, வெளிநாட்டு பறவைகள்கொண்டு வரப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம் ஏற்காடு அடிவாரத்தில் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு மான்கள், வெள்ளை மயில்கள், நட்சத்திர ஆமைகள், முதலை, குரங்கு, நாரைகள், கொக்குகள், மதுரை அழகர் கோயிலில் இருந்த ஆண்டாள் யானை, ரோஸ்ரிங், ஹாம் கிட், அழகு ரெட் ஆகிய வகைகளை சேர்ந்த கிளிகள், புறாக்கள், நட்சத்திர ஆமைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. இவற்றை கண்டுகளிக்க சேலம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

பூங்காவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில், ரூ.1.07 கோடியில் சிமெண்ட் சாலை, காட்டு மாடு கூண்டு மற்றும் பல மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கூண்டு அமைக்கப்பட்டதே தவிர, அங்கு விலங்கினங்களை கொண்டு வரும் முயற்சியில் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. மேலும் பூங்காவிற்கு இன்னும் பல வகையான பறவைகள், மான்கள், குரங்குகள் கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் குரும்பப்பட்டி பூங்காவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வண்டலூர் பூங்காவில் இருந்து வெளி நாட்டு பறவை, வெளிமான் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு பறவைகள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. விரைவில் காட்டு மாடு, கருங்குரங்கு, வண்ண நாரை, சாம்பல் நிற நாரை, கொக்கு ஆகியவை விரைவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: