×

வருசநாடு - வாலிப்பாறை சாலைப்பணி தரமில்லை... கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

வருசநாடு: வருசநாடு முதல் வாலிப்பாறை கிராமம் வரை வரை நெடுஞ்சாலை துறை மூலம் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், கிராவல், ஜல்லி அடிக்காமல் மிகவும் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் மக்கள் கவலையடைந்துள்ளனர். எனவே மாவட்ட இதை மாவட்ட நிர்வாகம் சாலை பணிகள் தரமாக நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன் கூறுகையில், ‘‘வருசநாடு முதல் வாலிப்பாறை கிராமம் வரை தார்ச்சாலை பணிகளும் தடுப்புச்சுவர் கட்டும் பணியும் நெடுஞ்சாலை துறை மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மூல வைகை ஆற்றிலிருந்து மணல் திருட்டுத்தனமாக எடுத்து வரப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. மேலும் தடுப்புச்சுவர் கட்டுவதில் முறைகேடு நடக்கிறது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதை கண்டித்து கடமலை மயிலை ஒன்றியத்தில் பல இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சுவர் விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது. சாலை ஒப்பந்ததாரர்கள் மீது அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களுடைய கட்சியிலிருந்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்’’ என்றார்.

இதுகுறித்து மலைகிராமவாசிகளிடம் கேட்டதற்கு, ‘‘அரசு அதிகாரிகள் இப்பணிகளை கண்டுகொள்வதில்லை. இதனால்தான் இது போன்ற பணிகள் கிடப்பில் உள்ளது. முறைகேடு நடந்து வருகிறது. தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Varusanad, Road
× RELATED திருவண்டார்கோவில்- கொத்தபுரிநத்தம் சாலையை சீரமைக்க கோரிக்கை